முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி - அயோத்தி இடையே அதிவேக புல்லட் ரயில் இயக்கம்

சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறை மேம்படுத்தும் விதமாக அயோத்தி - டெல்லி இடையே அதிவேக புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக டெல்லி மற்றும் அயோத்தி இடையேயான புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  புல்லட் ரயிலின் விரிவான திட்டத்தின்படி, டெல்லி மற்றும் வாரணாசி இடையே ஆக்ரா - லக்னோ - பிரயாக்ராஜ் வழியாக மொத்தம் 941.5 கி.மீ. பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த புல்லட் ரயில் திட்டமானது மொத்தம் 670 கி.மீ தூரத்தை மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் அடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. 

இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. லக்னோ  -கோராக்பூர் புறவழிச்சாலையில் உள்ள ஸ்ரீ ராம் சந்திர விமான நிலையத்திற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு இறுதி செய்யப்பட்ட நிலையில் இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது 7 முதல் 8 ஆண்டுகளில் பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து