பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்: 50 ரெயில்கள் ரத்து

Punjab-farmers 2021 08 21

Source: provided

லூதியானா : பஞ்சாபில் விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் காரணமாக ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் நிலுவை தொகைகளை வழங்க வேண்டும், கரும்பின் விலையை உயர்த்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கினர். தங்களின் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். 

இதன்படி விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக 50 ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட்டுள்ளதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதேபோல், சாலை மறியல் போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனால், ஜம்மு - பஞ்சாப் இடையேயான வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து