ரக்‌ஷா பந்தன் பண்டிகை: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

Modi 2021 07 12

Source: provided

புது டெல்லி: ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி  ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டின் ரக்‌ஷா பந்தன் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ரக்‌ஷா பந்தன் தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 

ரக்‌ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.  

அதே போல், துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,  ரக்‌ஷா பந்தன் என்பது சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஆழமாக வேரூன்றிய அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு. பெண்களின் பெருமையை நிலைநாட்டவும், பாதுகாப்பான சூழலை எப்போதும் உறுதி செய்யவும் சபதம் ஏற்போம் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து