வருமான வரித்துறை இணையதளத்தில் கோளாறு: இன்போசிஸ் சி.இ.ஓ.,வுக்கு மத்திய நிதியமைச்சகம் சம்மன்

Nirmala 2021 08 17

Source: provided

புதுடெல்லி : வருமான வரித்துறை இணையதளத்தில் உள்ள கோளாறுகள் சரி செய்யாதது குறித்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் அளிக்கும்படி அதனை வடிவமைத்த இன்போசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., விளக்கம் அளிக்கும்படி மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

வருமான வரித்துறையின் இணையதளம் மறுசீரமைக்கப்பட்டு கடந்த ஜூன் 7-ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. அந்த இணையதளத்தை இன்போசிஸ் நிறுவனம் மறுவடிவமைத்திருந்தது. இருப்பினும், அதில் பல கோளாறுகள் ஏற்பட்டன. இது குறித்து பயனாளர்கள், புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். சுயவிவரத்தில் கூடுதல் விவரங்கள் சேர்த்தல், கடவுச்சொல் மாற்றுதல் ஆகியவற்றில் சிக்கலை சந்தித்ததாகவும், இணையதளம் மெதுவாக செயல்படுவதகவும் கூறியிருந்தனர்.

இது குறித்து, இன்போசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நந்தன் நீலகேணி கவலை தெரிவித்ததுடன் கோளாறு சரி செய்யப்படும் என்று கூறியிருந்தார். மத்திய அரசும், அனைத்தும் சரி செய்யப்படும் எனக்கூறியதுடன், இணையதளத்தை பயனாளர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க இன்போசிஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இருப்பினும், தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் வருமான வரித்துறை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 

வருமான வரித்துறையின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு 2.5 மாதங்கள் ஆகியும், கோளாறுகள் இன்னும் சரி செய்யாதது ஏன்? என்பது குறித்து இன்று மத்திய நிதியமைச்சரிடம் விளக்கம் அளிக்கும்படி இன்போசிஸ் சி.இ.ஓ. ஷலீல் பரேக்கிற்கு மத்திய நிதியமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது. நேற்று முன்தினம் (ஆக.,21) முதல் வருமான வரித்துறை இணையதளம் கிடைக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து