காஷ்மீரின் தால் ஏரியில் மிதக்கும் ஏ.டி.எம். வசதி எஸ்.பி.ஐ. வங்கி தொடங்கியது

SBI-Bank 2021 08 22

Source: provided

ஜம்மு: நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்.பி.ஐ, ஜம்மு காஷ்மீரின் தால் ஏரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மிதக்கும் ஏ.டி.எம். வசதியை தொடங்கியுள்ளது. கடந்த 16-ம் தேதி, எஸ்.பி.ஐ. தலைவர் தினேஷ் காரா, இந்த ஏ.டி.எம். வசதியை தொடங்கி வைத்தார். இது ஸ்ரீநகருக்கு மேலும் அழகு சேர்க்கும் என எஸ்.பி.ஐ. வங்கி  நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வங்கியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோரின் வசதிக்கு ஏற்ப ஸ்ரீநகர், தால் ஏரியில் உள்ள படகில் ஏ.டி.எம். வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் ஏ.டி.எம்.-இன் மூலம் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளது.  தால் ஏரியில் மதிக்கும் காய்கறி சந்தை, தபால் நிலையம் ஆகியவையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து