முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட புதுவை முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுவை : கொரோனா சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து 3 மாதங்களுக்குப் பிறகு முதல் தவணை கொரோனா தடுப்பூசியைப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செலுத்திக்கொண்டார்.

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி கடந்த மே மாதம் 7-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அதனை அடுத்து 9-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சை முடிந்து மே மாதம் 17-ம் தேதி வீடு திரும்பினார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து 3 மாதங்களுக்குப் பிறகு நேற்று அவர் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். சுகாதாரத்துறை ஏற்பாட்டின்பேரில் இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு தலைமையிலான சுகாதாரக் குழுவினர் அவரது வீட்டுக்கு நேற்று மாலை சென்று, முதல்வர் ரங்கசாமிக்குத் தடுப்பூசி செலுத்தினர். சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் அருண், முதல்வர் வீட்டிற்கு வந்தார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு அரை மணி நேரம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் அவர் இருந்தார்.

இதனிடையே அவர் இன்று டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்திக்க இருப்பதாக சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் இன்று அவர் டெல்லி செல்லும் வாய்ப்பு இல்லை என முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து