முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பர் மாதத்தில் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 24 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300-க்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஒரு நாளைக்கு 8 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் காலை 9 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசன டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகர்பத்தி விற்பனை திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அதிகாரி ஜவகர், கோசாலை மற்றும் ஆயுர்வேத கல்லூரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

ஏழுமலையான் கோயில் உள்பட இதர தேவஸ்தான கோயில்களில் சுவாமிக்கு பயன்படுத்திய பூக்களை கொண்டு பெங்களூரை சேர்ந்த தர்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஏழு விதமான நறுமணங்கள் கொண்ட அகர்பத்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இவற்றை செப்டம்பர் முதல் வாரத்தில் பக்தர்களுக்காக விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். திருமலையில் உள்ள லட்டு கவுன்டர், தேங்காய் கவுன்டர், கோசாலை, திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயில், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில், விஷ்ணு நிவாசம் மற்றும் சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை ஆகிய இடங்களில் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். எஸ்.வி. ஆயுர்வேத மருந்தகம், கோவையைச் சேர்ந்த ஆசிர்வாத் நிறுவனத்துடன் இணைந்து, 15 வகையான பஞ்சகவ்ய பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து