முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தொடக்கம் : 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை

வெள்ளிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2021      ஆன்மிகம்
Image Unavailable

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் வரும் செப்.5-ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணித் திருவிழா நேற்று தொடங்கியது. செப்டம்பர் மாதம் 7-ம் தேதி வரை 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது.

தூண்டுகை விநாயகர் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப் பட்டம் மேள வாத்தியம் முழங்க யானை மேல் எடுத்து வரப்பட்டது. இதில் கோயில் உதவி ஆணையர் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கால் விழா நிகழ்வுகள் அனைத்தும் கோயில் உள்பிரகாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கோயிலில் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்வுகளும் கோயில்பணியாளர்கள் மூலம் நடைபெறும்.

ஆவணித் திருவிழா முக்கிய நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டில் இருந்து இணையதளம் வாயிலாக (யூ-டியூப்) காணும் வகையில் கோயில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் வீட்டில் இருந்தே சுவாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து