வங்கதேச விமானிக்கு மாரடைப்பு: இந்தியாவில் தரையிறக்கப்பட்டு சிகிச்சை

Aeroplane 2021 06-30

வங்காளதேச விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் பயணம் மேற்கொண்டது. விமானம் இந்திய எல்லைக்குள், அராய்பூர் அருகே வந்த போது விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை தரையிறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். ஆனால் விமானம் ராய்ப்பூர் அருகில் இருப்பதால் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் படி தகவல் அளிக்கப்பட்டது.

அதோடு கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு தளத்தில் இருந்து நாக்பூர் விமான கட்டுப்பாட்டு தளத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வங்காளதேச விமானியும் இது தொடர்பாக நாக்பூர் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனால் நாக்பூர் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. விமானம் எந்த வித பிரச்சினையும் இன்றி பத்திரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

உடனே விமானத்தில் இருந்த விமானி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தக்க நேரத்தில் விமானி விமானத்தை நாக்பூரில் தரையிறக்கியதால் 126 பயணிகள் உயிர் தப்பினர். விமானிக்கு தக்க சிகிச்சையளிக்கப்பட்டு அதே விமானத்தில் டாக்காவுக்கு விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட அந்த வங்காளதேச விமான நிறுவனம் இந்தியாவுக்கான விமான சேவையை நிறுத்தியிருந்தது. சமீபத்தில்தான் அந்நிறுவனம் தனது சேவையை இந்தியாவுக்கு தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து