ரூ.188 கோடியில் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ரஹா ரோந்து கப்பல் நாட்டிற்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

Rajnath 2021 07 21

கடல் ரோந்து கப்பல்கள் வரிசையில் 7-வதான இந்திய கடலோர காவல் படை கப்பலான விக்ரஹாவை நேற்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு, ராணுவ தளபதி ஜெனரல் எம் எம் நரவணே, இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் கே நடராஜன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டிணத்தை மையமாகக் கொண்டு செயல்படவிருக்கும் இந்த விக்ரஹா கப்பல், கடலோர காவல் படையின் கிழக்கு பகுதி தளபதியின் கட்டுப்பாட்டில் கிழக்கு கடல் பகுதியில் பணியாற்றும். 98 மீட்டர் ரோந்து கப்பலில் 11 அதிகாரிகள் மற்றும் 110 மாலுமிகள் இருப்பார்கள். லார்சன் அண்ட் டூப்ரோ ஷிப் பில்டிங் லிமிடெட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கப்பலில் நவீன தொழில்நுட்ப ராடார்கள், தொலைதொடர்பு மற்றூம் பயணக்கருவிகள், சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஒரு 40/60 போபொர்ஸ் துப்பாக்கி, இரண்டு 12.7 மி.மீ ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் இக்கப்பலில் உள்ளன.ஒரு ஹெலிகாப்டர் மற்றும் நான்கு அதி வேக படக்குகள் ஆகியவற்றை சுமந்து செல்லும் வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலுடன் சேர்த்து, 157 கப்பல்கள் மற்றும் 66 விமானங்கள் இந்திய கடலோர காவல் படையிடம் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து