புதுச்சேரி கவர்னர் தமிழிசை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

Tamilisai 2021 07 24

Source: provided

புதுச்சேரி : கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், 

கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவதரித்த கிருஷ்ண பகவான் மக்களை காப்பதற்காக அசுரர்களை அழித்ததைப்போலவே தடுப்பூசி மூலம் கரோனா எனும் நோயை அழிக்க அனைவரும் இந்த கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் உறுதியேற்போம். 

இந்த நாள் நம் அனைவர் வாழ்விலும் ஒளி கூட்டும் நாளாக மட்டுமல்லாது, வழிகாட்டும் நாளாகவும் அமைய வேண்டும் என அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து