முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

70 ஆண்டுகளாக உ.பி.யின் அமேதி தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது ஸ்மிருதி இராணி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 5 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ: உத்தர பிரதேசத்தின் அமேதி தொதி 70 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஸ்மிருதி இராணி, கடந்த 2019-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதிக்கான எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அமேதி தொகுதியின் எம்.பி.க்களாக இருந்தனா். இந்த நிலையில் தற்போது அமேதி தொகுதி பல காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதாக ஸ்மிருதி இராணி குற்றம் சாட்டியுள்ளார். 

அமேதியில் உள்ள ஜகதீஷ்பூா் பகுதியில் செயல்படும் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், ஸ்மிருதி இராணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு வசதிகள் வழங்கப்படாமல் அமேதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் கூட இல்லாத சூழல் நிலவியது. தற்போது 7 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் அமேதி தற்சாா்படைந்துள்ளது என்று தெரிவித்தாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து