முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: ஜனாதிபதி வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 5 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உட்பட 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதை காணொலி வாயிலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 15- ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரை கவுரவிக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டு தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, காணொளி மூலம் நடைபெற்ற விழாவில் 44 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நல்லாசிரியர் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர். 

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய 'நல்லாசிரியர்' விருதை காணொலி வாயிலாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். திருச்சி பிராட்டியூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஷாதேவி, ஈரோடு மொடக்குறிச்சி அரசு மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகியோர்  தேசிய நல்லாசிரியர்  விருதைப் பெற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து