முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தினம்: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 5 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் நேற்று ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆசிரியர் தினத்தில், இளம் வயதினர் அறிவை வளர்ப்பதில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும் கற்பித்தல் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா காலங்களில் மாணவர்களின் கல்வியில் புதுமை மற்றும் அவர்களது கல்வி தொடருவதை உறுதி செய்தது பாராட்டத்தக்கது.  டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் தேசத்திற்கு அளித்த பங்களிப்புகளை நினைவு கூர்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து