முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபா வைரஸ்: கேரளம் விரைந்தது மத்தியக் குழு

ஞாயிற்றுக்கிழமை, 5 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக 12 வயது சிறுவன் உயிரிழந்திருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். சிறுவனின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய கிருமியியல் மையத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிறுவனுக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து, தேசிய நோய் தடுப்பு மையத்தின் குழுவை கேரளத்திற்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.  

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது,  

துரதிருஷ்டவசமாக, சிறுவன் உயிரிழந்தார். அவரின் உடல்நிலை சனிக்கிழமை இரவு கவலைக்கிடமாகவே இருந்தது. வைரஸை கண்காணிக்கும் வகையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவனிடம் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  ரத்தம், மூளை தண்டுவட திரவம், எச்சில் மாதிரிகளில் வைரஸ் இருந்துள்ளது. நான்கு நாள்களுக்கு முன்பு, அச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சனிக்கிழமை, இரவு அவரின் உடல்நிலை மோசமாக மாறியது. நேற்று முன்தினம் அவரின் மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு எந்த விதமான அறிகுறிகளும் இல்லை. அவர்கள் அனைவரும் கண்டறிப்பட்டுள்ளனர். கவலைப்பட ஒன்றுமில்லை. சூழலை சுகாதாரத்துறை உன்னிப்பாக கவனித்துவருகிறது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து