முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்: மெகபூபா முப்தி கவலை

செவ்வாய்க்கிழமை, 7 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர் :  நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.  

பி.டி.பி. கட்சியின் தலைவர் முப்தி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் உரிமைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படுகிறது. ஆனால், காஷ்மீர் மக்களின் உரிமைகளை வேண்டுமென்றே மறுக்கிறது.  நான் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். காஷ்மீர் நிர்வாகத்தின் கருத்துப்படி காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை. இயல்புநிலை இருப்பதாக கூறும் அவர்களின் போலித்தனத்தை வெளிக்காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாதத் தலைவர் சயத் அலி கிலானியின் இறுதிச் சடங்கு குறித்து மெகபூபா முப்தி டுவிட்டரில் மத்திய அரசைச் சாடியிருந்தார். அதில், மறைந்த ஒரு நபரின் இறுதிச்சடங்கை நடத்த குடும்ப உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் இங்கு குடும்ப உறுப்பினர்கள் இறுதிச்சடங்கை நடத்த அரசு அனுமதிக்கவில்லை.  குறிப்பாக கிலானியின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்பட்டு, குறிப்பாகப் பெண்கள் தாக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தியா மிகப்பெரிய தேசம், இது அதன் கலாச்சாரத்துக்கு எதிரானது. இந்தியாவில் உள்ள ஜனநாயகத்துக்காக உலக அளவில் நாம் மதிக்கப்படுகிறோம். ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்களின் கருத்தை முன்வைக்க உரிமை இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஜம்மு காஷ்மீரில் எந்த அசம்பாவிதமும் இல்லை, இயல்பாக இருக்கிறது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜம்மு காஷ்மீர் போலீஸார் தரப்பில் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு விட்டன. குறிப்பாக இன்டர்நெட்டுக்கு கூட கட்டுப்பாடு இல்லை, ஜம்மு மற்றும் காஷ்மீரில் சூழல் முழுமையாக இயல்புக்கு வந்து விட்டது. இருப்பினும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து