முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதன்கிழமை, 8 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

2022-23-ம் ஆண்டு ராபி சந்தை பருவத்துக்கு, அனைத்து கட்டாய ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ராபி பயிர் விளைவிப்பவர்களுக்கு, லாபமான விலையை உறுதிசெய்ய , ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையில் கடந்த ஆண்டை விட, தற்பேது உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதன்படி சுத்திகரிப்பு செய்த மசூர் பருப்பு மற்றும் கடுகுக்கு (குவிண்டால் ஒன்றுக்கு ரூ.400), பருப்புக்கு (குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  குங்குமப்பூவாக இருந்தால், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.114 அதிகரிக்கப்பட்டுள்ளது. பலவகையான பயிர்கள் விளைவிக்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான், இந்த வேறுபட்ட விலையின் நோக்கம்.

கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,975-லிருந்து ரூ.2,015 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதரவு விலை ரூ.40 அதிகரிக்கப்பட்டுள்ளதால், கோதுமைக்கு உற்பத்தி விலையை விட 100 சதவீத லாபம் கிடைக்கும். பார்லியின் குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1600-லிருந்து ரூ.1,635 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு வகைகளின் ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5230 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மசூர் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,100-லிருந்து ரூ.5,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்கள் மற்றும் கடுகின் ஆதரவு விலை ரூ.4,650-லிருந்து ரூ.5,050 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.குங்குமப்பூ-வின் குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,327-லிருந்து ரூ.5,441 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க, உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு லாபம் கிடைக்கும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என கடந்த 2018-19-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2022-23-ம் ஆண்டில் ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால், கோதுமை, எண்ணெய் வித்துக்கள்,  கடுகை விளைவிப்பவர்களுக்கு உற்பத்தி விலையை விட 100 சதவீத லாபம், பருப்பு வகைகளுக்கு 74 முதல் 79 சதவீத லாபம், பார்லிக்கு 60 சதவீத லாபம், குங்குமப்பூவுக்கு 50 சதவீத லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மாற்று பயிர்களை விளைவிக்க விவசாயிகளை ஊக்குவிக்கவும், சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றவும், தேவை மற்றும் விநியோகத்துக்கு இடையேயான சமநிலையற்ற தன்மையை சரிசெய்யவும், எண்ணெய் வித்துக்கள், பருப்புகள் மற்றும் தினை வகைகளுக்கு ஆதரவாக குறைந்தபட்ச ஆதரவு விலையை மாற்றியமைக்க  கடந்த சில ஆண்டுகளாக ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கான தேசிய திட்டம், சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியை குறைக்கவும் உதவும். ரூ.11,040 கோடி மதிப்பிலான இத்திட்டம், சமையல் எண்ணெய் உற்பத்தி துறையை விரிவுபடுத்துவதோடு மட்டும் அல்லாமல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவும்.

கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த ‘பிரதமரின் அன்னதத்தா ஆய் சன்ரக்‌ஷன்’ (ஆஷா)  திட்டம், விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருளுக்கு லாபம் பெற உதவும்.  இந்த ஒருங்கிணைந்த திட்டத்தில், விலை ஆதரவு திட்டம் ,  விலை குறைபாட்டை செலுத்தும் திட்டம் , தனியார் கொள்முதல் மற்றும் இருப்பு வைத்திருப்பு திட்டம் என்ற 3 துணை திட்டங்கள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து