இல்லங்களில் வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை கோவில்களில் ஒப்படைக்கலாம்: அறநிலையத்துறை ஆணையர் தகவல்

vinayakar-1-2021-09-20

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை கோவில்களில் ஒப்படைக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமய விழாக்கள், மதம் சார்ந்த ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்துவதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே பக்தர்கள் தங்களது இல்லங்களில் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை (விநாயகர்) ஆலயங்களில் வைத்திட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

 

கோவில்களில் பெறப்படும் சிலைகளை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலை பெற்று உரிய நடவடிக்கைகளை சார்நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து