முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீத கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்: அரசு பரிசீலனை செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

போலீசாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீதம்  கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

கரூரை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் மாசிலாமணி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடக்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது போலீசாருக்கு 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.  3 ஷிப்ட்டில் பணிபுரிய அனுமதி தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கருணை தொகை மற்றும் உதவி தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும். போலீசாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீதம்  கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும். காவல்துறையினரின் மகத்தான பணியை வேறு எந்த பணியுடனும் ஒப்பிட முடியாது. ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் காவல் துறையினர் மன உளைச்சலுடன் பணிபுரிகின்றனர். காவல் துறையினரின் மகத்தான பணியை வேறு எந்த பணியுடனும் ஒப்பிட முடியாது. விடுமுறையின்றி 24 மணி நேரமும் பணிபுரிவதால் தான் சில நேரங்களில் போலீசார் கோபமடைகின்றனர்.

 

நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றினால் மட்டுமே சிறந்த காவலர்களை எதிர்பார்க்க முடியும். போலீசாரின் குறை கேட்டு, நிவர்த்தி செய்ய ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் போலீஸ் ஆணையம் அமைக்க வேண்டும். 3 மாதத்தில் ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து