மேலும் 1,631 பேருக்கு கொரோனா தொற்று: தமிழக சுகாதார துறை தகவல்

coronavirus-1

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,631 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,30,592 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 174 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று மட்டும் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,119 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,523 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,79,169 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,58,197 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,39,06,770 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 16,304 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து