முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாள் : சென்னையில் திருவுருவ சிலைக்கு இன்று அமைச்சர்கள் மாலையணிவித்து மரியாதை

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு மாலையணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். 

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

சமூக நீதிக்காகப் பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மறைந்த இராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளினை முன்னிட்டுச் சென்னை, கிண்டி, ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு இன்று காலை 9.00 மணியளவில், தமிழக அரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்துவார்கள். அன்னாரின் நினைவாக கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.

தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் வகையில்,  அவர்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தென்னாற்காடு மாவட்டத்தில் 1918-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 16-ம் நாள் பிறந்த இராமசாமி படையாட்சியார் சிறுவயது முதற்கொண்டே சமுதாயப் பணிகளில் மிகவும் நாட்டம் கொண்டு அதன் தொடர்ச்சியாக உழைப்பாளர் கட்சி என்கின்ற அரசியல் கட்சியையும் நிறுவி அதன்மூலம்  பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமின்றி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காவும், தான் சார்ந்த சமுதாய மக்களின் சமூக நீதிக்காகவும் போராடியவர். மக்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த மறைந்த இராமசாமி படையாட்சியார் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். தான் சார்ந்த மிகவும் பின்தங்கிய வன்னியர் சமுதாயத்திற்கு மாநிலத்திலும் மத்தியிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்று இறுதி வரை போராடியவர். மக்களுக்காக வாழ்ந்து மறைந்த அன்னாரின் அருமை பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் சார்பில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் மணிமண்டபமும் திருவுருவச் சிலையும் அமைக்கப் பட்டுள்ளது.

அன்னாருடைய கோரிக்கையை நிறைவேற்றுகின்ற வகையிலும் மிகவும் பின்தங்கிய வன்னியர் சமுதாய மக்கள் ஏற்றம் பெற்றிட கலைஞரின் ஆட்சிக் காலத்தில்தான்  வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவித இட ஒதுக்கீடு வழங்கிச் சிறப்பித்ததோடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அவர்களுடைய முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துத் தந்தார். மேலும் இடஒதுக்கீடு போராட்டத்தின்போது உயிர்நீத்தோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியோடு ஓய்வூதியமும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கினார்.

கலைஞரின் அடியொற்றி நல்லாட்சியினை வழங்கிக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்மையில் சட்டமன்றப் பேரவையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்திற்கான 10.5 விழுக்காடு தனி ஒதுக்கீட்டினைச் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தினார். மேலும் 1987-ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக நீதிப் போராளிகளின் தியாகத்தினைப்  பெருமைப்படுத்துகின்ற வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும்  அறிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து