கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Chennai-High-Court 2021 2

Source: provided

 

 

சென்னை: ஆகஸ்ட் 31க்கு முன் யார்யார்கொரோனாவால் இறந்தார்கள் என ஆய்வு செய்து இறப்பு சான்றிதழ்களை தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் நிகழும்போது இறப்பு சான்றிதழில் கொரோனாவால் மரணம்என குறிப்பிடாமல் இணைநோய்களால் மரணம் என்று குறிப்பிடுவதாக குற்றம்சாட்டி ஸ்ரீராஜலட்சுமி என்ற வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருந்தார். மேலும்இதனால் மத்தியமாநில அரசுகள் வழங்கும் நிவாரணத்தை பெறமுடியவில்லை என்றும்கொரோனாவால் ஏற்படும் மரணத்தை இறப்புச் சான்றிதழில் குறிப்பிடவேண்டும் என்றும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு விதிகள் வகுத்துள்ளதாகவும்அந்த விதிகளின் அடிப்படையில்மாவட்ட அளவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர்தலைமை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பான விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.  

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 27.10.2021 இந்த காளை வந்தாலே களம் பதறும், ஜல்லிக்கட்டு காளை கருப்பு | |Kaalai Valarpu Interview | இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021
காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...! பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...!
ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely, நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...!
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து