முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

cஆப்கானிஸ்தான் சூழல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மோடி வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

 

 

புதுடெல்லி : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் தொடங்கியது.
மாநாட்டை தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தலைமை தாங்கி நடத்தினார். நேரடியாகவும், காணொளி முறையிலும் நடக்கும் இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள்,
துர்க்மெனிஸ்தான் அதிபர் மற்றும் சிறப்பு விருந்தினர் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் பிரதமர் மோடி தலைமையில் இந்திய உயர்மட்டக் குழு பங்கேற்றுள்ளது.
மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இந்தியாவின் பிரதிநிதியாக நேரில் கலந்து கொண்டுள்ளார். மாநாட்டுக்கு இடையே சீன வெளியுறவு மந்திரி வாங் யியை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி, ஈரான் அதிபர் ஆகியோரையும் சந்தித்து பேசினார். 
பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்று மாநாட்டின் தொடக்க நிகழ்வில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், மத்திய ஆசியாவுடனான தொடர்பை அதிகரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும், மத்திய ஆசிய நாடுகள் இந்தியாவின் பரந்த சந்தையுடன் இணைப்பதன் மூலம் பெரும் நன்மை அடைய முடியும் என்றும் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க இதுவே சரியான சமயம். அமைதி, பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய மிகப்பெரிய சவால்கள் உள்ளன. இந்த பிரச்சனைகளின் அடிப்படை காரணம் தீவிரமயமாக்கல். ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிகழ்வுகள் இந்த சவாலை தெளிவுபடுத்தியுள்ளன. ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து