முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைப் பல்கலை. தொலைதூர படிப்புக்கான தேர்வுகள் வரும் 27-ல் தொடக்கம்

சனிக்கிழமை, 18 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் 27-ம் தேதி தொடங்கவுள்ளன.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை (எம்பிஏ உட்பட), தொழிற்கல்வி, டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2021-ம் ஆண்டு மே மாதம் தேர்வு நடைபெற்றிருக்க வேண்டும்.

கொரோனா காரணமாகத் தள்ளிப்போயிருந்த இந்தப் படிப்புகளுக்கான தேர்வுகள் வரும் 27-ம் தேதி தொடங்கவுள்ளன. மேலும் இதற்கான தேர்வுக்கால அட்டவணையும் ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை செப்டம்பர் 20-ம் தேதி அன்று அதே இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இந்தத் தகவலை, பல்கலைக்கழகப் பதிவாளர் இராம.சீனுவாசன் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து