முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள், குழந்தைகள் கல்வி பயில தடை: தலிபான்களுக்கு யுனெஸ்கோ, யுனிசெஃப் கடும் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் படிப்பதற்கான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது அவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பதாகும் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ, யுனிசெஃப் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கடந்த மாதம் கைப்பற்றியபின் அளித்த வாக்குறுதிக்கு மாறாக இப்போது செயல்படுகிறார்கள். காமா செய்திகள் தரப்பில் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் எமிரேட் அரசில் அனைத்து தனியார், அரசு சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மதரீதியான பள்ளிக்கூடங்கள் சனிக்கிழமை முதல் திறக்கலாம். ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே வரலாம்” எனத் தெரிவித்துள்ளது.

1996-2001-ம் ஆண்டுவரை இருந்த அரசைப் போல் தலிபான் அரசு இருக்காது, பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில் அதிலிருந்து மாறுபட்டுள்ளனர். இந்நிலையில் யுனிசெஃப், யுனெஸ்கோ அமைப்பு பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை மூட உத்தரவிட்டது குறித்துக் கண்டனம் தெரிவித்துள்ளது.

யுனெஸ்கோ விடுத்த அறிக்கையில், “அனைத்து நிலைகளிலும் பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்பட்டால், அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுமதிக்காவிட்டால் மீளமுடியாத பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். குறிப்பாக, உயர்நிலைப் பள்ளி அளவில் மாணவிகளுக்குத் தாமதமாக அனுமதி அளிப்பது அவர்களின் கல்வியிலும், வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

ஆப்கனின் எதிர்காலம் நன்கு படித்த மாணவர்கள், மாணவிகளைச் சார்ந்திருக்க வேண்டும். ஆதலால் ஆப்கனை நிர்வாகம் செய்யும் ஆட்சியாளர்கள், அனைத்துக் குழந்தைகளும் கல்வி உரிமையைப் பெற சமமான அளவில் வாய்ப்பை வழங்க வேண்டும். பள்ளிகளை அனைத்துப் பிரிவினருக்கும் திறக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி உரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கல்வி அவசியம்'' என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து