முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் விலக்கு மசோதாவிற்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் வழங்குவார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நீட் விலக்கு மசோதாவிற்கு புதிய கவர்னர் விரைவில் ஒப்புதல் வழங்குவார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக முதுகலை மருத்துவ படிப்புக்கான சிமுலேஷன் மையம், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம்.ஏ. சுப்ரமணியனால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மேம்படுத்தப்பட்ட சிமுலேஷன் மையம் மிக உயர்திறன் கொண்ட, அதிநவீன தொழில் நுட்ப திறன் உடைய, கணிணிமயமாக்கப்பட்ட சிமுலேட்டர்களை கொண்டதாகும்.

பின்னர் செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, 

ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆணையத்திற்கு 85,000 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆணைய அறிக்கை சுட்டி காட்டி இருக்கிறது. புதியதாக பொறுப்பேற்றுள்ள கவர்னர் நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவாக ஒப்புதல் வழங்குவார். அவரது ஒப்புதலுக்கு பிறகு ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பப்படும். இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். 

மேலும் மெகா தடுப்பூசி மூலமாக நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாள் இலக்கை விட கூடுதலாக ஒரு லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதை போன்று ஒன்றிய அரசும் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து