முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடானில் கனமழை - வெள்ளத்தால் தற்காலிக வீடுகளையும் இழந்த அகதிகள்

வியாழக்கிழமை, 23 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் மொத்தம் 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளக்காடாகின. இதனால் அங்கு ஏற்கெனவே அகதிகளாக வாழ்ந்து வந்த மக்கள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சூடான் அகதிகள் ஆணையத்தின் மூத்த தலைவர் இப்ரஹிம் முகமது கூறுகையில், சூடான், தெற்கு சூடான் நாடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சூடான், மற்றும் தெற்கு சூடானில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சூடானில் உள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளாக உள்ளன.

இங்கு அகதிகள் உட்பட 2 லட்சத்து 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்டை நாடான தெற்கு சூடானில் 4 லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வாழ்விடத்தை இழந்து அகதிகளாக வாழும் மக்கள் இன்னும் மோசமான நெருக்கடியில் இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. பலர் வீடுகள் இல்லாமல் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு புதிய தங்குமிடத்தை ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் சூடான் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 140 பேர் இந்த காலகட்டத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தனர்.

இந்த ஆண்டு இதுவரை மழை, வெள்ளத்தால் 80 பேர் உயிரிழந்துள்ளனர். 35,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

 

சூடானின் அல் ஜப்பாலின் மாவட்டம் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் தாங்கள் கடந்த 40 ஆண்டுகளில் இப்படியான மழை வெள்ளத்தைப் பார்த்ததில்லை எனக் கூறுகின்றனர். இதற்கிடையில் முகாம்களில் மலேரியா தொற்று பரவி வருகிறது. 150 அகதிகளுக்கு மலேரியா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து