முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை- அகமதாபாத் விரைவு ரயில் திட்டம் குறித்தகாலத்தில் முடிக்கப்படும்: பிரதமர் மோடியிடம் ஜப்பான் பிரதமர் உறுதி

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

மும்பை-அகமதாபாத் விரைவு ரயில் திட்டம் குறித்த காலத்துக்குள், விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா உறுதியளித்தார்.

குவாட் மாநாட்டில் இதுவரை பிரதமர் மோடி நேரடியாகப் பங்கேற்றது இல்லை. ஆனால், முதல்முறையாக நேரடியாகப் பங்கேற்ற பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார் மோடி . ஜப்பான் பிரதமர் சுகாவும், பிரதமர் மோடியும் நேரடியாக முதன்முறையாக நேற்றுச் சந்தித்துப் பேசினர். ஜப்பான் பிரதமராக சுகா பதவி ஏற்றபின் பிரதமர் மோடியுடன் நடத்தும் முதல் சந்திப்பு இதுவாகும்.

ஜப்பான் பிரதமர் சுகாவுடன் பிரதமர் மோடி சந்தித்தது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு நாட்டுபாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பாதுகாப்பு தளவாடங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை கூட்டாக மேம்படுத்துவது குறித்து ஒப்புக்கொண்டனர். இரு பிரதமர்களும் நேரடியாக முதன்முறையாகச் சந்தித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாகப் பேசினர் அதன்பின் இப்போதுதான் முதல்முறையாக நேரடியாகச் சந்தித்தனர். ஜப்பான் நாடு வெற்றிகரமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்தி முடித்தமைக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்படும் மும்பை-அகமதாபாத் ஸ்பீட் ரயில் திட்டத்தை விரைந்து குறித்த காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரு பிரதமர்களும் முடிவெடுத்தனர்.

இந்திய பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, தடைகளற்ற பயணத்துக்கு இரு தரப்பு நாடுகளும் துணையாக இருக்கும் என இரு தலைவர்களும் உறுதியளித்தனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், அங்குள்ள அரசியல் சூழல் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

 

இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம், வர்த்தக உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருவது குறித்து இரு பிரதமர்களும் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து