முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டன

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

சோமாலியா நாட்டில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டதை அந்நாட்டு மக்கள் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கொண்டாடுகின்றனர். 

சோமாலிய தலைநகர் மொகதீஷுவில் உள்ள பாரம்பரியமிக்க நேஷனல் தியேட்டர் கடந்த 1967-ம் ஆண்டில் கட்டப்பட்டது. கடந்த 1991-ல் அங்கு உள்நாட்டு போர் வெடித்த பிறகு அந்த தியேட்டர் ராணுவ தலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 2012-ல் சீரமைக்கப்பட்டு மீண்டும் படங்களை திரையிட தயாரானபோது, அல்கொய்தா ஆதரவு தீவிரவாத அமைப்புகள் அங்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த தியேட்டரில் வெற்றிகரமாக 2 குறும்படங்கள் பொதுமக்களுக்காக திரையிடப்பட்டது. ஆப்ரிக்க நாடான சோமாலியா உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அல்கொய்தா ஆதரவு தீவிரவாத அமைப்புகள் பொழுதுபோக்கு அம்சங்களை எதிர்த்து வருவதால் பொதுமக்கள் கூடும் இடங்களில் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

 

இந்த சூழலில் தான் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே கலை ஆர்வலர்கள் இணைந்து நேஷனல் தியேட்டரில் குறும்படங்களை திரையிட்டு வரலாற்று சாதனையை படைக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து