முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயர்கல்வி வரை உதவித்தொகை பெற தேசிய திறனாய்வுத் தேர்வு: அக்.24-ல் நடைபெறுகிறது

வெள்ளிக்கிழமை, 24 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

உயர்கல்வி வரை உதவித்தொகை வழங்கும் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான 2-வது கட்டத் தேர்வு நாடு முழுவதும் அக்.24-ம் தேதி நடைபெறும் என்று என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு (என்.டி.எஸ்.இ.) நடத்தப்படுகிறது. மாநில, தேசியளவில் என 2 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு உயர்கல்வி (பி.எச்.டி.) முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

குறிப்பாகத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு 11, 12-ம் வகுப்பு படிக்கும்போது மாதந்தோறும் ரூ.1,250 தொகையும், உயர்கல்வியில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு ரூ.2,000 தொகையும் வழங்கப்படும். யு.ஜி.சி. விதிமுறைகளின்படி பிஎச்டி மாணவர்களுக்குத் தேவையான கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில் இந்தத் தேர்வு (NTSE) நடத்தப்படுகிறது.

இந்நிலையில் 2-வது கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு, அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 13-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் 24-ம் தேதி நாடு முழுவதும் தேர்வு நடைபெறுகிறது. இதில் இரண்டு தேர்வுகள் தலா 100 மதிப்பெண்களுக்கு இரண்டு மணிநேரம் நடைபெறும்.

முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும். அக்டோபர் 8-ம் தேதியன்று தேர்வுக்கான அனுமதிச் சீட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்.சி.இ.ஆர்.டி. தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் முதல்கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து