முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு

சனிக்கிழமை, 25 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,616 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சற்று ஏற்றம், இறக்கங்களை சந்தித்தி வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் 31,382 பேருக்கு வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்  மேலும் 29,616 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.   

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 17,983 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,36,24,419 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,46,658 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 28,046 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,28,76,319 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,01,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 84,89,29,160 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71,04,051 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று முன்தினம் ஒரே நாளில் 15,92,421 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 56,16,61,383 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து