முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனி தேர்தலில் மெர்கெலுக்கு பின்னடைவு: இடதுசாரி கட்சியான சோசியல் டெமாக்ரட்சுக்கு வெற்றி வாய்ப்பு

திங்கட்கிழமை, 27 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பெர்லின்: ஜெர்மனி நாடளுமன்ற தேர்தலில் இடதுசாரி கட்சியான ஜெர்மன் சோசியல் 

டெமாக்ரட்ஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தற்போது பதவியில் இருக்கும் சான்செலர் ஏங்கலா மெர்கெலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.

ஜெர்மனியின் பிரதமராக உள்ள ஆங்கெலா மெர்க்கலின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் யூனியன் பிளாக் கட்சியும் இடதுசாரி சமூக ஜனநாயக கூட்டணியும் போட்டியில் உள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், பிரதான எதிர்க்கட்சியான சமூக ஜனநாயக கட்சி 25.7% வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது.

பிரதமர் ஆங்கெலா மெர்க்கலின் யூனியன் பிளாக் கட்சி 24.1% வாக்குகளை மட்டுமே பெற்று பின் தங்கியுள்ளது. தற்போதைய சூழலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உள்ளது. எனவே பிரதான எதிர்க்கட்சியான சமூக ஜனநாயக கட்சி பிற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சிகளை தொடங்கியுள்ளது.

இன்னும் முழுமையாக வெளிவராத தேர்தல் முடிவுகளில் மைய - இடதுசாரி கட்சியான ஜெர்மனி சோசியல் டெமாக்ரட்ஸ் கட்சி வெற்றியை நோக்கிச் செல்கிறது. எனினும் இந்தக் கட்சி சிறிய அளவிலேயே முன்னிலை பெற்றுள்ளது. மெர்கலுக்கு அடுத்ததாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் சான்செலர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ள ஆர்மின் லஷெட் தாம் ஆட்சி அமைப்பது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் தங்களுக்கு ஆட்சி அமைக்க முழு ஆதரவு கிடைத்துள்ளது என்று சோசியல் டெமாக்ரட்ஸ் கட்சியின் ஒலாஃப் ஷோல்ட்ஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து