முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைண்ஸில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 27 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பிலிப்பிண்ஸ் நாட்டின் மிண்டோரா மாகாணத்தில் நேற்று அதிகாலை 1.12 மணி அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 24 கி.மீ தொலைவில் 74 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.

சில இடங்களில் நில அதிர்வு அதிகரித்து பாதிப்புகள் உண்டானது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கைக் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

_____________

விமானங்ளை இயக்க அழைப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் ஆகஸ்ட் 30-ம் தேதி முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது.ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு சர்வதேச விமானங்கள் மற்றும் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் தயாராக இருப்பதாக தலிபான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது.  தற்போது காபூல் விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி  செய்யப்பட்டதாகவும், முன்பு போல அனைத்து விமானங்களையும் இயக்க  விமான நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் தலிபான் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

___________

மீண்டும் படைகள் குவிப்பு?

இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி எல்லையோரப் பகுதிகளில் சீனா மீண்டும் படைகளை குவிப்பது அம்பலமாகியுள்ளது. கடந்த ஆண்டு லடாக் பகுதியில் அத்துமீற முயன்ற சீன படையினரை இந்திய ராணுவத்தினர் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றமான சூழல் உருவான நிலையில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசம் ஏற்பட்டது. அப்போது, எல்லையோர பகுதியில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் 17 மாதங்களுக்குப் பிறகு, இந்திய எல்லையையொட்டியுள்ள சீன பகுதிகளில் வீரர்கள் தங்குவதற்கான கட்டமைப்புகளை அந்நாட்டு ராணுவம் உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. மேலும் எல்லையொட்டிய பகுதிகளில் விமானங்கள் தரையிறங்குவதற்கான கட்டமைப்புகளை அதிகரிக்கவும் சீன ராணுவம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து