முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமியை 49 ஆண்டுகளாக வட்டமிடும் ' லேண்ட்சாட் ' செயற்கைக் கோள் !

செவ்வாய்க்கிழமை, 28 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கலிஃபோர்னியா : பூமியை 49 ஆண்டுகளாக வட்டமிடும் ' லேண்ட்சாட் ' செயற்கைக் கோள் வரிசையில் தற்போது லேண்ட்சாட் - 9 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

உலகின் மிக முக்கியமான செயற்கைக்கோள், கலிஃபோர்னியாவிலிருந்து செப்டம்பர் 27-ம் தேதி ஏவப்பட்டது. லேண்ட்சாட் - 9 என்பது சுமார் கடந்த 50 ஆண்டுகளாக பூமியை கண்காணித்து வரும் விண்கலன்களின் தொடர்ச்சியாக இருக்கிறது. வேறு எந்த ரிமோட் சென்சிங் அமைப்பும் நமது பூமியின் மாறி வரும் நிலை குறித்த நீண்ட, தொடர்ச்சியான பதிவை வைத்திருக்கவில்லை.

லேண்ட்சாட் - 9 வான்டன்பெர்க் விண்வெளிப்படை தளத்திலிருந்து அட்லஸ் ராக்கெட்டில் உள்ளூர் நேரப்படி காலை 11:12-க்கும் ஏவப்பட்டது. அப்பல்லோ விண்வெளி வீரர்கள் பூமியைத் திரும்பிப் பார்த்த எடுத்த படங்கள்தான், நம் பூமிக்கு மேல் நிரந்தரக் கண்காணிப்பு வேண்டும் என்கிற எண்ணத்தை உறுதிப்படுத்தியது. 19720ம் ஆண்டில், அமெரிக்க விண்வெளி நிறுவனம் (நாசா), அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) ஆகிய இரண்டும் இணைந்து, அவற்றின் புவி வள ஆற்றல் தொழில்நுட்ப செயற்கைக்கோளை ஏவத் தொடங்கின.

தற்போது ஒன்பதாவது இமேஜிங் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது, அத்திட்டம் தான் பின்னர் லேண்ட்சாட் திட்டம் என்று அழைக்கப்பட்டது. லேண்ட்சாட் செயற்கைக் கோள்கள், பெருநகரங்களின் வளர்ச்சி, விவசாயத்தின் பரவல், கடற்கரைகள், காடுகள், பாலைவனங்கள், பனிப்பாறைகளின் வளர்ச்சி மற்றும் அதன் மாற்றங்களை பட்டியலிட்டுள்ளது. காட்டெருமை, வோம்பாட்ஸ், மரங்கொத்திப் பறவை, வால்ரஸ் என பல விலங்குகளைக் கூட கண்காணிக்க இந்த செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து