முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்

புதன்கிழமை, 29 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.

ஜெய்ப்பூரில் சிபெட் - பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தௌசா ஆகிய மாவட்டங்களில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

“மாவட்டம் - பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் இணைந்த புதிய மருத்துவ கல்லூரிகளின் உருவாக்கம்” என்ற மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளை நிறுவுவதற்கு தகுதி குறைந்த, பின்தங்கிய மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திட்டத்தின் மூன்று கட்டங்களின் கீழ் நாடு முழுவதும் 157 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைந்து  ஜெய்ப்பூரில் சிபெட் - பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. சுய நிலையான இந்த நிறுவனம், பெட்ரோ ரசாயணம் மற்றும் அது சம்பந்தப்பட்ட துறைகளின் தேவையை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி வருகிறது. திறன் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களாக இளைஞர்கள் உருவாவதற்கு ஏற்ற கல்வியை இந்த நிறுவனம் அளிக்கும்.மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து