முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதன்கிழமை, 29 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  பிரதான் மந்திரி போஷன் சக்தி அபியான் திட்டத்தின் கீழ்  11 லட்சம் பள்ளி செல்லும் மாணவர்கள் பயன் பெறுவர். 

ஏற்றுமதியாளர், வங்கிகளுக்கு ஆதரவளிக்க ஏற்றுமதி கடன் உத்திரவாத கழகத்தில் ரூ.4400 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.  அதில்  ரூ.4,400 கோடி முதலீடு செய்வதன் மூலம் 59 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். 

 

தொடர்ந்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது., அடுத்த நிதியாண்டில் பங்குச்சந்தையில்  ஈசிஜிசி பட்டியலிடப்படலாம் என்று நான் நம்புகிறேன்.  சீனாவில் இருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்வதற்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. அப்படி எந்த முடிவும் மத்திய அரசு எடுக்கவில்லை. இது முற்றிலும் ஆதாரமற்றது. வதந்திகளைப் பரப்புவதற்கான ஒரே தொழில் சிலரிடம் இருப்பதாகத் தெரிகிறது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து