முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துனிசியாவின் முதல் பெண் பிரதமர்

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

    வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாட்டிற்கு முதல்முறையாக நஜ்லா பவுடன் ரோம்தனே என்ற பெண் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். உயர் கல்வி அமைச்சகத்தின் இயக்குனரான இவர், ஏற்கனவே உலக வங்கியில் பணிபுரிந்தவர். கடந்த ஜூலை மாதம் நாட்டின் அதிபர் கயிஸ் சயித் முந்தைய அரசை கலைத்து உத்தரவிட்டதை அடுத்து 2 மாதங்களாக பாராளுமன்றம் முடங்கிப் போய் இருந்தது.

இந்தநிலையில் கடந்த வாரம் புதிய அரசை அமைப்பது தொடர்பாக நஜ்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டார். நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நஜ்லா 10-வது பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

சீனாவில் விமானப்படை சகாசம் சீனா விமானப்படையின் பலத்தை பறைசாற்றும் வகையில் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆயுத தொழில்நுட்பங்கள் ஆகியவை முதல்முறையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில், 15,000 மீட்டர் உயரத்தில் 20 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட பாதுகாப்பு படையின் ட்ரோன் விமானமும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சந்திரனின் சுற்றுப்பாதைக்கு 25 டன் பளுவை தூக்கி செல்லும் திறன் கொண்ட ராக்கெட்டை 13 ஆவது சீன சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சீன விண்வெளி கழகம் திட்டமிட்டிருந்ததாக அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த சாகச நிகழ்ச்சி 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருந்தது. பின்னர், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நிலையில், தற்போது நடைபெற்றுள்ளது.

_____________

அமெரிக்காவில் 2-ம் டோஸ் தடுப்பூசி உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 39,19,92,662 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.இதில் 21,40,43,376 பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாகவும், 18,55,37,265 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தாய்லாந்தில் கனமழை - வெள்ளம் தாய்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் புயலால் உருவான கனமழையால் இதுவரை 70,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. தாய்லாந்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள 70 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன. 

மேலும் அடுத்த சிலதினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாகவும் இருவரைக் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

சீனாவில் மீண்டும் கொரோனா உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் 11 பேருக்கு உள்ளூரில் இருந்தே தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  அதே சமயம் அங்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 96,106 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து