முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயுஷ்மான் டிஜிட்டல் திட்டத்திற்கு பாராட்டு: பில்கேட்ஸூக்கு பிரதமர் மோடி நன்றி

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்திற்கு பாராட்டு தெரிவித்த பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ஆயுஷ்மான் டிஜிட்டல் திட்டத்தை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதன்மூலம் நாடு முழுவதும் மருத்துவசேவைகள் டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தனது ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதில் சுகாதார வசதிகளை அனைவருக்கும் சமமாக கிடைக்க செய்ய ஆயுஷ்மான் டிஜிட்டல் சுகாதார கட்டமைப்பு உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதே போல இந்த திட்டம் சுகாதார சேவைகளை வழங்குவதை எளிதாகும் என்றும் இந்தியாவின் சுகாதார இலக்குகளை மேம்படுத்த உதவும் என்றும் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மருத்துவசேவைகள் மற்றும் மருத்துவ பொருட்கள் கிடைப்பது விரைவுப்படுத்தப்படும் என்பது ஆரோக்கியமான விஷயம் எனவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். 

 

இதற்கு ட்விட்டரில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் குறித்து அன்பான வார்த்தைகளுக்கு நன்றி என்று அவர் கூறியுள்ளார். சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்த கோணத்தில் இந்தியா கடுமையாக உழைத்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து