முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காணொலிக் காட்சி மூலம் ராஜஸ்தானில் 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

ராஜஸ்தானில் 4 மருத்துவ கல்லூரிகளுக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நேற்று அடிக்கல் நாட்டினார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

ஜெய்ப்பூரில் சிபெட் - பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை நேற்று காலை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பிறகு ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தௌசா ஆகிய மாவட்டங்களில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

“மாவட்டம் - பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் இணைந்த புதிய மருத்துவ கல்லூரிகளின் உருவாக்கம்” என்ற மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவ கல்லூரிகளை நிறுவுவதற்கு தகுதி குறைந்த, பின்தங்கிய மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திட்டத்தின் மூன்று கட்டங்களின் கீழ் நாடு முழுவதும் 157 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து