முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது முறை ஏவுகணையை பரிசோதித்த வட கொரியா

வெள்ளிக்கிழமை, 1 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பியாங்யாங் : விமானத்தை தாக்கி அழிக்கும் புதிய ரக ஏவுகணையை மீண்டும் பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது. இந்த மாதத்தில் இது 4-வது முறையாகும்.

கடந்த ஒரு மாத காலத்துக்குள் வட கொரியா நடத்திய நான்காவது ஏவுகணை பரிசோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாகவும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் வட கொரியாவின் அரசு ஊடகமான கே சி என் ஏ குறிப்பிட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் போதும், வட கொரியா தன் ஆயுத மேம்பாட்டை குறைக்கும் எண்ணத்தில் இல்லை என்பதையே சமீபத்தைய ஆயுத பரிசோதனைகள் காட்டுகின்றன. தென் கொரியா உடனான ஹாட்லைன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இப்படிப்பட்ட ஏவுகணை பரிசோதனைகள் நிலையற்றதன்மை மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்குவதாக அமெரிக்காவின் உள்துறை செயலர் அந்தோனி ப்ளிங்கன் கூறினார். ஆனால் வடகொரியாவோ தற்காப்புக்கு ஆயுதங்கள் தேவை என கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவும், தென் கொரியாவும் இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை கடைபிடிப்பதாகவும் வட கொரியா கூறிவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து