முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் கடும் மின்சார தட்டுப்பாடு பல லட்சம் வீடுகள் இருளில் மூழ்கும் அபாயம்

வெள்ளிக்கிழமை, 1 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பெய்ஜிங்  சீனாவில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அங்கு பல லட்சம் வீடுகளும், வர்த்தகங்களும் மின்சாரம் இல்லாமல் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் மின்சார தட்டுப்பாடு அரிதான விஷயமல்ல, ஆனால் இந்த ஆண்டு பல காரணிகளால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள தொழிற்சாலை பகுதிகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பனிகாலம் நெருங்குகிறது. இதனால் உலகின் பிற பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்படும்.

சீனாவில் கோடைகாலத்திலோ அல்லது பனிகாலத்திலோ அதிக மின்சார பயன்பாடு இருக்கும் சமயத்தில் கடுமையான மின்சார தட்டுப்பாடு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் இந்த ஆண்டு சில காரணிகள் இந்த பிரச்னையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் மீண்டும் வழக்கம்போல இயங்க தொடங்கி வருகிறது சீனா. இந்நிலையில் சீன பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதனை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அதிக மின்சாரம் தேவைப்படுகிறது.

2060ஆம் ஆண்டுக்குள் சீனாவில் கரியமிள வாயுவின் வெளியேற்றம் இல்லாமல் போக வேண்டும் என சீனா சில விதிகளை விதித்துள்ளது. இதனால் நிலக்கரி உற்பத்தி குறைந்துள்ளது. இருப்பினும் பாதி மின்சாரத்திற்கு நாடு நிலக்கரியைதான் நம்பியுள்ளது.

அதேபோன்று மின்சாரத்தின் தேவை அதிகரித்திருப்பதால் நிலக்கரியின் விலையும் அதிகரித்துள்ளது. ஆனால் அரசு மின்சார கட்டணத்தின் மீது கடுமையாக இருப்பதால் நிலக்கரி உற்பத்தி ஆலைகள் நஷ்டத்தில் இயங்க தயாராக இல்லை. எனவே பலர் பெருமளவு உற்பத்தியை குறைத்துவிட்டனர்.

எனவே தற்போது கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அங்கு பல லட்சம் வீடுகளும், வர்த்தகங்களும் மின்சாரம் இல்லாமல் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து