முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன் : ஐ.நா. பொதுச்சபை தலைவர் பேட்டி

சனிக்கிழமை, 2 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : தான் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக ஐ.நா. பொதுச்சபை தலைவர் அப்துலா சாஹீத் தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியை இன்னும் பல ஐரோப்பிய நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுவந்தாலும் கூட அவர்களுக்கு கட்டயமாக தனிமைப்படுத்துதலை அமலில் வைத்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை தங்கள் நாட்டுக்குள் நுழைய பிரிட்டன் அரசு தடை விதித்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் நடந்த ஐ.நா. பொதுச்சபையின் 76 வது வருடாந்திரக் கூட்டத்தின் தலைவராக இருந்த அப்துல்லா ஷாஹீத் தான் 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகாவும், புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளது.

தான் கோவிஷீல்டு போட்டுக் கொண்டது குறித்து அப்துல்லா கூறுகையில்., "நான் இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். எத்தனை நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டது என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால், உலகளவில் பெரும்பாலானோர் இந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். அதனால் நானும் செலுத்திக் கொண்டேன். நான் நலமுடனேயே இருக்கிறேன். இதில் ஏதும் பாதிப்பு இருக்குமா என்பதை மருத்துவர்கள் சொல்வார்கள்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து