முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாஷிங்டன் வீட்டை விற்றார் கமலா ஹாரிஸ்

சனிக்கிழமை, 2 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ். இவருக்கு இரண்டு படுக்கையறை கொண்ட 1,730 சதுர அடியிலான வீடு வாஷிங்டனில் இருந்தது. இந்த வீட்டியை கமலா ஹாரிஸ் 1.85 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 1.995 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்வதாக தெரிவித்திருந்த கமலா ஹாரிஸ், அதன்பின் 1.85 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்.

இவர் ஏற்கனவே சான் பிராஸ்சிஸ்கோவில் உள்ள அப்பார்ட்மென்ட்-ஐ 8.6 லட்சம் டாலருக்கு விற்பனை செய்திருந்தார். இந்த வீட்டை கமலா ஹாரிஸ் 1998-ம் ஆண்டு 2.99 லட்சம் டாலருக்கு வாங்கிருந்தார். கமலா ஹாரிஸ்க்கு இன்னும சில வீடுகள் உள்ளன. 3,500 சதுர அடியில் 3.2 மில்லியன் மதிப்பிலான வீடு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது. தற்போது துணை ஜனாதிபதிக்கான வீட்டிற்கு வசித்து வருகிறார்.

---------------

இயல்பு நிலைமைக்கு திரும்பும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா, நவம்பர் மாதம் தொடங்கி தனது சர்வதேச எல்லைகளை திறக்க முடிவு செய்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியா பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஆஸ்திரேலிய குடிமக்கள் நாட்டைவிட்டு வெளியேறவும் தடை விதித்தது. இது கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பெரிதும் உதவியது ஆனால் மக்களிடையே பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. 

பலர் தங்களின் குடும்பங்களை விட்டு நீண்டநாள் பிரிய வேண்டிய சூழலும் ஏற்பட்டது. “ஆஸ்திரேலியர்களுக்கு தங்களின் வாழ்வை திரும்பி அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். அதேபோல வெளிநாட்டு பயணிகளுக்கு உடனடியாக அனுமதில்லை. இருப்பினும் அதுகுறித்து யோசித்து வருவதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

______________

காஷ்மீரில் பாக். ஆதரவு தீவிரவாதிகள் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபின், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் எண்ணிக்கை அதிகரிப்பது இதுதான் முதல்முறையாகும்.

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா ஆதரவு தீவிரவாதிகள், ஹக்கானி நெட்வொர்க்குடன் இணைந்து ஜம்மு காஷ்மீருக்குள் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியுள்ளனர் என்று நிக்கி ஏசியா செய்தி வெளியிட்டதாக ஐரோப்பிய யூனியன் டுடே தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்திலிருந்து ஏறக்குறைய 50 தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தானை ஒட்டிய பழங்குடியினர் பகுதியிலிருந்து புறப்பட்டு, ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

______________

பின்லாந்தில் கீரிகளுக்கு கொரோனா தடுப்பூசி

டென்மார்க், பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது மிங்க் வகை விலங்குகள். இவை சாதுவான உயிரினம். இவற்றின் அடர்த்தியான ரோமத்தைக் கொண்டு குளிருக்கு இதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

கொரோனா உலகளவில் பரவ ஆரம்பித்தபோது மிங்க் விலங்குகளிடமிருந்து புதுவகை கொரோனா வைரஸ் உருவாக வாய்ப்பிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இதனையடுத்து, மிங்க் அழிப்பு தொடங்கியது. டென்மார்க் ஃபர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அறிக்கையின்படி 3-ல் 2 பங்கு மிங்குகள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் டென்மார்க் அரசு கடும் கண்டனங்களைப் பெற்றது. இதனை அடுத்து தற்போது மிங்க் வகை கீரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பின்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து