முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு ரத்து தொடர்பாக அ.தி.மு.க மசோதாவைத்தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் புதுப்பித்துள்ளார் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 2 அக்டோபர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

செங்கல்பட்டு : அ.தி.மு.க ஏற்கெனவே கொண்டு வந்த சட்ட மசோதாவைதான் ஸ்டாலின் புதுப்பித்துள்ளார் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தும், அவர்கள் வெற்றிக்கும் ஆலோசனைகளை வழங்கியும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஈச்சங்காடு சந்திப்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது., ஒரு மாநிலம் அனைத்து நிலையிலும் சிறந்து இருக்க, சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும். மக்கள் பயமின்றி நிம்மதியாக வாழ வேண்டும். அந்த சூழல் தமிழகத்தில் இல்லை. பெண்கள் தனியாக செல்ல முடியாத சூழல் உள்ளது. தி.மு.கவினரும், முதல்வர் ஸ்டாலினும் பொய் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். முதல் கையெழுத்தே நீட் ரத்து என்றனர். அதற்கு சட்ட மசோதாவையும் நிறைவேற்றினர். ஆனால் அந்த சட்ட மசோதாவை ஏற்கெனவே அ.தி.மு.க நிறைவேற்றிவிட்டது. அதை இப்போது ஸ்டாலின் புதுப்பித்துள்ளார்.

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் மருத்துவக் கல்லூரியில் அ.தி.மு.க அரசு சார்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தேர்தல் முழுக்க முழுக்க தொண்டர்களுக்கான தேர்தல். இதில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஜெயலலிதாவின் ஆத்மாவுக்கு பரிசாக அளிக்க வேண்டும் என்றார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து