முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாய் எக்ஸ்போ கட்டுமான பணியின் போது 5 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

துபாய் : துபாயில் தொடங்கிய உலகின் மிக பிரமாண்டமான ‘துபாய் எக்ஸ்போ-2020’ல், இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதற்கான வளாகத்தை கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமீரக அரசு கட்டி வந்தது. இதில், தினமும் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த 2 லட்சம் ஊழியர்கள் நேரம், காலமின்றி ஈடுபட்டனர்.

ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தை கட்டுவதற்கு, 24 கோடி மணி நேர மனித உழைப்பு பயன்படுத்தப்பட்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், இந்த கட்டுமான பணியில் விபத்துகள் அதிகளவில் நடப்பதாகவும், கொரோனா அச்சுறுத்தலிலும் வெளிநாட்டு தொழிலாளர்களின் பாஸ்போர்ட்டுகளை பறித்து கொண்டு, மிரட்டி வேலை வாங்கப்படுவதாகவும், மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் உலகளவில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கட்டுமான வளாகத்தில் நடந்த விபத்துகளின் விவரங்களை வெளியிடும்படியும் அமீரக அரசை வலியுறுத்தின. ஆனால், அமீரக அரசு மவுனமாக இருந்தது. இதனால், இந்த கண்காட்சியில் பங்கு பெறப் போவதில்லை என ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 நாடுகளும் அறிவித்தன. இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தற்போது கண்காட்சி தொடங்கப்பட்ட நிலையில், கட்டுமான பணியின் போது நடந்த விபத்துகளில் 5 தொழிலாளர்கள் இறந்ததாக இந்த கண்காட்சியின் தகவல் தொடர்பாளரான ஸ்கோனாய்ட் மெக்ஜியாசின் ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஆனால்,  விபத்துக்கள் பற்றி விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.

துபாய் கண்காட்சியில் பல்வேறு நாடுகள் விதவிதமான வேலைபாடுகளுடன் ஆடம்பரமான அரங்கங்களை அமைத்துள்ள நிலையில், இந்தியா தனது 4 மாடிகள் கொண்ட பிரமாண்ட அரங்கத்தை ரூ.400 கோடி செலவில் அலுவலகம் போன்ற அமைப்புடன் கூடிய நிரந்தர கட்டடமாக அமைத்துள்ளது. கண்காட்சிக்கு பிறகும் வர்த்தகம், கலாசார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பயன்படுத்துவதற்காகவே, இதுபோல் கட்டப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து