முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு - ராகுல்காந்தி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கடந்தாண்டு லடாக் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய பாதுகாப்பு படையினருக்கும் மோதல் நிகழ்ந்தது. இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

லடாக்கை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி, உத்தரகாண்டில் உள்ள பரஹோதி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமரிசித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், "சீனா + பாகிஸ்தான் + மிஸ்டர் 56 இன்ச் ஆகியோரின் காரணமாக இந்தியாவில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது" என இந்தியில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பரஹோதி பகுதிக்கு சென்ற சீன ராணுவ வீரர்கள் சில மணி நேரங்கள் அங்கிருந்துவிட்டு பின்னர், திரும்பி சென்றுவிட்டனர் என தகவல் அறிந்து  சிலர் கூறியுள்ளனர். ஆனால், சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து