முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் ஜெட் விமான விபத்தில் 8 பேர் பரிதாப பலி

திங்கட்கிழமை, 4 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் அதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விமானம் ஆளில்லாத கட்டிடம் ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியது.

மிலனின் உள்ள விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் சர்தீனியா தீவை நோக்கி பயணித்தைத் தொடங்கியது. ஆனால் கிளம்பிய சற்று நேரத்திலேயே மிலன் நகரின் புறநகர் பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விமானம் கீழே விழுந்த போது பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் அது இரண்டு அடுக்கு மாடி அலுவலக கட்டிடம் மீது ஒன்றின் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது என்றும் அந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு சிறுவனும் அடக்கம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் விழுந்து நொறுங்கி பொழுது தரையில் இருந்த யாருக்கும் காயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துகுள்ளான கட்டிடத்தின் கீழ் உள்ள இந்த கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து