முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு: பொதுமக்கள் 12 பேர் உடல்சிதறி பலி

திங்கட்கிழமை, 4 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

ஆப்கன் தலைநகா் காபூலிலுள்ள மசூதியொன்றின் வாயிலில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 12 பேர் பலியானதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து டுவிட்டா் வலைதளத்தில் தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது., காபூல் நகர மசூதிக்கு அருகே குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்தனா் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காபூல் நகரிலுள்ள ஈத்கா மசூதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இறந்த ஜபிஹுல்லா முஜாஹிதினின் தாயாரது நினைவாக அந்த மசூதியில் ஞாயிற்றுக்கிழமை தொழுகை நடத்தப்பட்டது. அந்தத் தொழுகையில் கலந்துகொள்ள மற்ற தலிபான்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 

இந்தச் சூழலில், தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்புத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தாக்குதலில் தலிபான் அமைப்பினா் யாரும் காயமடையவில்லை என்று மற்றொரு செய்தித் தொடா்பாளா் பிலால் கரீமி தெரிவித்தார். குண்டுவெடிப்பில் உயிரிழந்த அனைவரும் பொதுமக்கள் எனவும் அவா்கள் மசூதிக்கு வெளியே நின்றிருந்ததாகவும் அவா் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து