முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் முழுவதும் முடங்கிய ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்: மன்னிப்பு கோரினார் 'மார்க் ஜூக்கர்பெர்க்'

செவ்வாய்க்கிழமை, 5 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

லண்டன் : பிரபல சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவை உலகம் முழுவதும் சுமார் 6 மணி நேரம் முடங்கியதற்கு, பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக் கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கியது. இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டது. இதனால் அவற்றை சார்ந்துள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு இந்த கோளாறு சரி செய்யப்பட்டது.

இந்நிலையில், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் முடங்கியதற்கு, பேஸ்புக் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக மார்க் சக்கர்பெர்க் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மெசன்ஜர் செயலிகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. நெருங்கியவர்களிடம் தொடர்புகொள்ள எங்கள் சேவையை எந்த அளவுக்கு நம்பியுள்ளீர்கள் என தெரியும். இடையூறுக்கு மன்னிக்கவும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பேஸ்புக் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மைக் ஷ்ரோப்ஃபர் தடங்கலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார், "எங்களை நம்பியிருக்கும் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய வணிகங்களும், குடும்பங்களும், தனிநபர்களும் என்னை மன்னிக்கவும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, 100 சதவீத நிலையை அடைய சிறிது நேரம் ஆகலாம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன?

வரலாறு காணாத இந்த முடக்கத்துக்குக் காரணம் என்ன? கான்ஃபிகரேஷன் மாற்றத்தை தவறாக செயல்படுத்தியதால்தான் இந்த முடக்கம் நேரிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. ஒரு கோடியே 6 லட்சம் பேர் இந்த சிக்கல் குறித்து ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். இந்த இணைய தளங்களின் கோளாறு எவ்வளவு பெரியது என்பதையும், உலகம் எப்படி இவற்றை சார்ந்திருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.

கிரீன்விச் சராசரி நேரப்படி திங்கள் கிழமை 16.00 மணிக்கு கிடைக்காமல் போன இந்த சேவைகள், 22.00 மணிக்கு மீண்டும் கிடைக்கத் தொடங்கியுள்ளன. தவறாக செயல்படுத்தப்பட்ட கான்ஃபிகரேஷன் மாற்றம் நிறுவனத்தின் உள்ளக கருவிகளையும், கணினிகளையும் பாதித்துவிட்டதால், சரி செய்யும் நடவடிக்கைகள் சிக்கலாக மாறிவிட்டதாக ஃபேஸ்புக் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து