முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகளை புகழ்கிறார் இம்ரான்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 5 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 'ஒசாமா பின்லேடன்' போன்ற உலகளாவிய பயங்கரவாதிகளை தியாகிகளாகப் போற்றுகிறார் என்று ஐநா கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. 

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76-வது கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் அமர்நாத், “பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி இங்கு அமைதி, பாதுகாப்பு பற்றி பேசுகிறார். ஆனால் பிரதமர் இம்ரான் கான், 'ஒசாமா பின்லேடன்' போன்ற உலகளாவிய பயங்கரவாதிகளை தியாகிகளாகப் போற்றுகிறார். பலதரப்பு மன்றங்களில் பொய்களைப் பரப்புவதற்கு பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொள்வது கூட்டு அவமதிப்புக்கு உரியது.

ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் உட்பட இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்தியாவுக்குள் நடக்கும் இவ்விவகாரங்கள் தொடர்பாக பதிலளிக்க இவை தகுதியற்றவை. ஜம்மு -காஷ்மீரின் முழு நிலப்பரப்பும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் எப்போதும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கும் என்பதை நான் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறேன். இது பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியையும் உள்ளடக்கியது'' என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து